அனலி வானொலி “வான்தமிழின் தேன் சுவை”
கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே…!

நேயர் கருத்துகள்
எமது நெறியாளுகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியைச் சார்ந்த இவர் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
தன்னுடைய ஓய்வு நேரங்களின் அனலியின் சமூக மேம்பாட்டுபணிகளில் ஈடுபடுவதோடு, அனலி வானொலியின் கதை சொல்லியாகவும், தன்னார்வ நிகழ்ச்சித் தொகுப்பாளராக சேவையாற்றி வருகிறார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்
குரல் கலைஞராகவும் ஒலித்தொகுப்பு நுட்பவாளராகவும் இருக்கின்ற இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரத்தைச் சார்ந்தவர் ஆவார்.
ஆங்கிலத் துறைபேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் தன்னார்வச் சேவையாக அனலி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைமைப் பொறுப்பை ஏற்று இயங்கிவருகின்றார்.
மேலும், அனலி வானொலியின் இளம் தொகுப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

ஒலித்தொகுப்பும் நிகழ்ச்சித் தலைமையும்
குரல் கலைஞராகவும் ஒலித்தொகுப்பு நுட்பவாளராகவும் இருக்கின்ற இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரத்தைச் சார்ந்தவர் ஆவார்.
ஆங்கிலத் துறைபேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர் தன்னார்வச் சேவையாக அனலி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைமைப் பொறுப்பை ஏற்று இயங்கிவருகின்றார்.
மேலும், அனலி வானொலியின் இளம் தொகுப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

வானொலி நிறுவனரும்
நிலையத்தின் தலைமை இயக்குனரும்
நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இதழியலாளர், நிகழ்த்து கலைஞர், நாடகவியலாளர், சமூகச் செயல்பாட்டாளர், ஊடகவியலாளர், ஆய்வாளர் என பன்முகத்திறன் கொண்ட குமரிமாவட்டம் நாகர்கோவிலைச் சார்ந்த தொடர்பியல், வடிவமைப்பு, திரைத்துறை பேராசிரியாக பணிபுரிந்துவரும் இரா. அரிகரசுதன் அவர்கள் வானொலி எனும் ஊடகத்தின் வலிமையை உணர்ந்தவர்.
அதன்பொருட்டும் தமிழ்ச் சமூகத்தின்பால் தான்கொண்ட அக்கறையின் பொருட்டும் “அனலி” எனும் இத்தமிழ் வானொலியை தோற்றுவித்து நடாத்தி வருகிறார்.
இவர் நாகர்கோவில் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பகுதிநேர நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கரன் தொலைக்காட்சி நாகர்கோவில் பிரிவு செய்தி வாசிப்பாளராகவும் இருந்த அனுபவமும் கொண்டவர்.
தமிழ் மணம் நுகர, தமிழ் மனதைத் தக்க வைக்க
கேட்கத் தவறாதீர்கள் அனலி வானொலி
“இது வான்தமிழின் தேன்சுவை”